சிறுபான்மையினர் நலனுக்காக உழைக்கும் மத்திய அரசு… மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தடுக்கும் தமிழக அரசு ; வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
23 December 2022, 9:34 am
Quick Share

கோவை ; மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தமிழக அரசு தடுப்பதாக பா.ஜ.க தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் காரமடையில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை பிரிவு சார்பில் கிருஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபாண்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு கிருஸ்துவர்களுடன் இணைந்து இயேசு கிருஸ்துவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய, இப்ராகிம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை மக்களின் மீது அக்கறை கொண்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சிறுபான்மை மக்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை கொண்டு சேர்க்க கூட தமிழக காவல்துறை அனுமதிப்பதில்லை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பா.ஜ.க சார்பில் ஒரு தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தினால் கூட கலவரம் ஏற்படும் என தங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை, என குற்றம்சாட்டினர்.

மேலும் கிருஸ்த்துமஸ் விழா நிகழ்ச்சியினை நடத்த பா.ஜா.க சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்க கூட விடாமல் நீதிமன்ற உத்தரவு என தடுப்பதாகவும், ஆனால் முதல்வர் மற்றும் உதயநிதி,அமைச்சர்களை வரவேற்க மட்டும் நூற்றுக்கணக்கான பேனர்களை வைக்க அனுமதி அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

Views: - 395

0

0