தமிழகத்திற்கு முன்னாள் பிரதமர் வி.பி. சிங் வந்த போது கனிமொழிக்கு இந்தி தெரியும், ஆனா இப்ப தெரியாது! அண்ணாமலை கிண்டல்..

5 November 2020, 7:47 pm
annamalai - Updatenews360
Quick Share

கரூர் : தமிழுக்கு மதிப்பு கொடுக்க கூடியவர்கள் வாடா, போடா என்று போஸ்டர்கள் அடிப்பார்களா ? என தி.மு.க கட்சி குறித்து பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

கரூர் மாவட்ட பா.ஜ.க கட்சி சார்பில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த கல்வி கொள்கை திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கே.பி.மோகன், நகுலன். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதே போல, புதிய வேளாண் மசோதா மற்றும் புதிய கல்விக் கொள்கை திட்டங்களில் வரும் நன்மைகள் குறித்து தற்போது தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள். ஆனால் கொள்கை முடிவில் தி.மு.க தான் எதிர்கட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருவதோடு, அதற்கெல்லாம், முட்டுக்கட்டை போட்டு பிரச்சாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதற்கு அடுத்த படியாக ஹிந்தி தெரியாது போடா ? என்று டீசர்ட் போட்டு கொண்டு ஆங்காங்கே சுற்றுகின்றனர். மொத்தமாகவே 100 டீசர்ட் தான் அடித்துள்ளார்கள். தமிழகத்தினை பொறுத்தவரை தமிழக பா.ஜ.க கட்சியும் தான் இந்தி திணிப்பினை விரோதப்படுத்தும் என்றும் முதன்முதலில் தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்றும் 1965, 1968, 1986 ஆகிய ஆண்டுகளில் இந்தி மொழியை திணித்தார்கள் என்றார். இதையெல்லாம் தமிழக மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

இதைவிட்டு விட்டு, இது தமிழ்நாடு டா ? வாடா ? போடா ? என்று போஸ்டர்கள் அடித்து தமிழை கொச்சைபடுத்தி வருகின்றனர். ஆனால், தமிழே தெரியாதவர்கள் தான் தமிழுக்காக போராட்டம் நடத்துபவர்களாக தி.மு.க வில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தி.மு.க வில் உள்ள முக்கிய தலைவர்கள் 6 நபர்கள் சாராய ஆலையை நடத்தி வருகின்றனர் என்றும் அவர்கள் அனைவரும் 1 சதவிகிதம் கல்விக்கு செலவிட்டு விட்டு மற்றவைகளை இலவசத்திற்கு கொண்டு செல்ல கூடியவர்கள் என்றார்.

ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கொண்டு தாய்மொழியையும் பேசி கொண்டு இந்தியையும் பேசி வருகின்றனர்., ஆனால் தமிழகத்தில் ஒருவர் தமிழையும் நன்றாக படிக்காமல் சுதந்திர தினத்திற்கும், குடியரசுத்தினத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பேப்பரை வைத்து கொண்டு அறைகுறை அரசியல் செய்து வருகின்றார் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்தார்.

மேலும், அண்ணாமலை பேசி கொண்டு இருக்கும் போது மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு இந்தி தெரியுமா ? என்று கேட்டதற்கு, கனிமொழிக்கு இந்தி தெரியும், ஏனென்றால் பிரதமராக வி.பி சிங் தமிழகம் வந்த போது, அவர் தான் இந்தி மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்தவர். ஆனால் கனிமொழி எம்.பி ஆனதற்கு பிறகு இந்தி தெரியாது என்றார்.

Views: - 24

0

0