குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவினர் : வி.ச.கவினர் திரண்டதால் போலீசார் தடியடி!!

27 October 2020, 1:11 pm
VCK BJP - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : கேளம்பாக்கம் அடுத்த வீராணம் பகுதியில் குஷ்பூ தங்கியிருந்த இடத்திற்க்கு பாஜகவினர் சென்று தர்ணா போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்க்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குஷ்புவை நாடு கடத்தவேண்டும் என கோஷமிட்டவாறு வந்தனர்.

இரண்டு தரப்பினருக்கும் தகராறு ஏற்படும் சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டார்.

சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சிறிய அளவில் தடியடி நடத்தி இரண்டு தரப்பினரும் விரட்டியடிக்கப்பட்டனர்.

Views: - 20

0

0