சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக : பிரதமர் பெயர் பயன்படுத்தப்படாததால் அதிருப்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 4:16 pm
Bjp Dissatisfied - Updatenews360
Quick Share

கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொண்ட நிலையில் பிரதமர் பெயரை பயன்படுத்தாததால் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறினர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ளது. இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில், முன்னதாக முதல்வர் குறித்தும், இந்த போட்டி நடைபெற முதல்வரின் முயற்சிகள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசினர்.

ஆனால் பிரதமர் குறித்து பேசவில்லை எனவும் பிரதமரின் பெயரை நிகழ்ச்சியில் பயன்படுத்தவில்லை எனவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சி துவங்கும் முன்னரே மேடையின் எதிர் புறத்தில் கோவை மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் முன்வரிசையில் 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்கியது முதல் சிறிது நேரம் வரை பிரதமர் பெயரை பயன்படுத்தாததால் பாஜகவினர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மௌனமாக வெளிநடப்பு செய்தனர்.

Views: - 406

0

0