தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி மாற வாய்ப்பு : பொன்.ராதாகிருஷ்ணன் சூசகம்!!

Author: Udayachandran
7 October 2020, 5:32 pm
Pon Radhakrishnan - Updatnews360
Quick Share

கன்னியாகுமரி : அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணி மாறலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமதி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அதேபோல அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருந்து அந்த 11 பேருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சில பேர் எங்காவது ஏதாவது நிகழ்ந்து விடக் கூடாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாஜகவை பொறுத்தவரையில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அரவணைத்து அழைத்துச் செல்லவும் நம்முடைய பணியாக இருக்கிறது அது அதிமுகவில் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்று கூறினார்.

கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம் தற்போது அவர்கள் கட்சியினுடைய  வேட்பாளரை அறிவித்திருக்கிறார்கள். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், பாராளுமன்றத்தில் தொடங்கிய கூட்டணி தற்போது வரை நீடித்து வருகிறது. எல்லா கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி அமைவதை விரும்புவார்கள் என கூறினார்.

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜகவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக ,அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும்.

நடிகர் ரஜினிகாந்த் பாஜக பாரதிய ஜனதா கூட்டணிக்கு வருவாரா என்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு அவருடைய கொள்கைகள் எந்த திசை நோக்கி பயணம் செய்கிறது என்பதை வைத்துதான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும் என்றார்.

வரும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும் என்று கூறிய அவர், அது அதிமுகவாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம், இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத கட்சிகளுடனான ஆட்சியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 46

0

0