திமுக கவுன்சிலருக்கு கடும் எதிர்ப்பு : வீடுகளில் கருப்பு கொடி கட்டிப் போராட்டம்!!
18 September 2020, 10:23 amகோவை : கோவையில் அம்பேத்கர் புகைப்படத்தை சேதப்படுத்திய கீரணத்தம் திமுக ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமியை கண்டித்து வியாபாரிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் இளங்கேவன் (48). அதே பகுதியில் வெற்றிலைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி அங்கு வந்த ஒன்றிய கவுன்சிலரான திமுகவை சேர்ந்த கருப்புசாமி, அங்கு கடை போடக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.
மேலும் அன்றைய தினம் இரவு கடையை சேதப்படுத்திய தோடு அருகிலிருந்த அம்பேத்கர் படத்தையும் , கொடிக்கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து இளங்கோவன் கடந்த 5ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்த சூழலில் கீரணத்தம் பகுதியில் வசிக்கும் வியாபாரிகள் அனைவரும் அம்பேத்கர் படத்தை மற்றும் கொடிக்கம்பத்தை சூறையாடிய திமுக ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமியை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் கருப்புசாமியை வன்கொடுமை புகார் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.