நடுக்கடலில் படகில் ஓட்டை : உயிர்தப்பிய 4 மீனவர்கள்!!

23 August 2020, 12:56 pm
Pondy Boat - Updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் நடுக்கடலில் படகில் ஓட்டை விழுந்ததால் கடல் நீர் உள்ளே புகுந்ததையடுத்து 4 மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர்.

புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலைவாணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரது கணவர் நடராஜன், அதே பகுதியை சேர்ந்த முருகன், அஞ்சாப்புலி சிலம்பரசன் ஆகியோர் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

தேங்காய்த்திட்டு துறைமுகத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது படகு லேசாக அடிபட்டது, பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் நள்ளிரவு திடீரேன படகுக்குள் கடல் நீர் புகுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகில் இருந்த தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தனர். ஆனாலும் கடல் நீர் வேகமாக உள்ளே நுழைய தொடங்கியதை அடுத்து படகை கரையோரமாக இயக்கி கடலூர்-புதுச்சேரி இடையில் உள்ள புதுக்குப்பம் கிராம கடலோர கரையில் நிறுத்தி விட்டு படகில் இருந்து கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். படகில் இருந்த இயந்திரங்கள் என சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்