7 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

25 November 2020, 11:21 am
Kanyakumari Boat - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் அடையாளமாக திகழும் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து குமரியின் அடையாளமாக திகழும் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை படகுகளில் சென்று கண்டு ரசிப்பது வழக்கம்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் படகு போக்குவரத்தை இயக்க வேண்டும், மேலும் புதிய படகுகளை கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்ற தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இயக்கப்படும் என அறிவித்தார், இந்நிலையில் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இந்த படகு போக்குவரத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சிஒன்றிய பெருந்தலைவர் அழகேசன் மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0