திருப்பூர் அருகே காட்டில் நடுவே எரிந்த உடல் : பாதி எரிந்த நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2021, 10:43 am
Man Body Recover - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை டாஸ்மாக் கடை அருகே உள்ள வானாதோட்டம் குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் அங்கு வந்து பார்த்த பொழுது முகம் மற்றும் வயிற்றுப் பகுதி மட்டும் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது.

அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா, அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் சம்பவ இடம் வந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 397

0

0