இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல பாலம் இல்லை….ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் அவலம்…

4 October 2020, 3:06 pm
thanjai issue - updatenews360
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இறந்தவரின் உடலை இறுதிச்சடங்கிற்கு எடுத்து செல்ல பாலமின்றி மக்கள் ஆற்றை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள வீரியங்கோட்டை மற்றும் கைவனவயல் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு அமைந்துள்ளது.

இவர்கள் அந்த சுடுகாட்டிற்கு செல்ல பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலுடன் ஆற்று நீரில் இறங்கி கடந்த செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

கோடை காலங்களில் ஆற்றில் நீர் அதிகளவு செல்லாததால் சிரமம் இல்லை. மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வரும் காலங்களிலும் மழைக் காலங்களிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இறந்தவரின் சடலத்துடன் ஆற்று நீரில் இறங்கி தான் கரையை கடக்க வேண்டியுள்ளது.

40 ஆண்டு காலமாக தாங்கள் அனுபவித்து வரும் தீராத்துயரில் இருந்து கரையேறும் வகையில் பாலம் கட்டித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 49

0

0