30 ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்த வீரப்பன் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் உடல்பாகங்கள் எரிப்பு!!

30 January 2021, 8:39 pm
Veerappan Animal Bones- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வீரப்பன் காலத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் உடல்பாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 11 வனச்சரகங்களில் கடந்த 30 ஆண்டுகளாக‌ வீரப்பன் வாழ்ந்த காலத்திலிருந்து வனப்பகுதியில் கொல்லப்பட்ட புள்ளிமான்கள், சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டன.

வன விலங்குகளை வேட்டையாடிய குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து அனைத்து வன விலங்குகளின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டு அவை சத்தியமங்கலம் சந்தன கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த உடல் பாகங்கள் மற்றும் குற்றங்கள் குறித்த வழக்குகளும் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த உடல் பாகங்கள் அனைத்தையும் அதனை தீயிட்டு கொளுத்த தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு ஏற்ப இன்று காலை சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வன உயிரின மருத்துவமனையில் அனைத்து வன விலங்குகளின் உடல் பாகங்களும் கணக்கிடப்பட்டு அவை சரியாக இருக்கின்றதா என்ற ஆய்வு நடத்தி மாவட்ட கள இயக்குனர் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இதுகுறித்து கள இயக்குனர் நிகார் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த வன விலங்குகளின் உடல் பாகங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டு உள்ளது. இதனை மேலும் இம்மாதிரியான குற்றங்கள் நடைபெறக் கூடாது.

இந்த உடல் பாகங்களை அழகுப் பொருட்களாகவும், காட்சி பொருட்களாகவும் பல்வேறு நபர்கள் வீடுகள், அலுவலகங்களில் வைப்பது தடுக்கப்படவேண்டும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த உடல் பாகங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டு உள்ளது எனக் கூறினர்.

Views: - 0

0

0