போலீசுக்கு நெருக்கடி கொடுக்க எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : கம்பி எண்ணும் சின்னத்தம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 4:18 pm
Bomb Threaten Arrest -Updatenews360
Quick Share

விழுப்புரம் : காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை 100 தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது, அதில்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் |அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்கு தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது.

உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் திண்டிவனம் சென்று அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மீது ஏற்கனவே ஏராளமான குற்ற சம்பவ
வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் காவல்துறை மீது இருந்த வெறுப்பின் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார். விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் அவரை கைது செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொடர்பாக 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 402

0

0