திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : தொலைபேசியில் வந்த மிரட்டலால் பரபரப்பு!!

1 February 2021, 2:11 pm
bomb Threaten - Updatenews360
Quick Share

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் அளித் தொலைபேசி தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

திருச்சி, விமான நிலையத்தின் முனைய மேலாளருக்கு இன்று வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வைக்க போவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வெற்றி, சின்னு, பிலிங்கி விமான நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மர்ம தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் பணியினை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளும் மர்ம பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா? என பார்வையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிர சோதனை செய்து வெளியேற்றினர்.

Views: - 36

0

0