அறநிலையத்துறை கீழ் உள்ள பிரபல கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்? மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனையால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 4:21 pm
Bomb Squad - Updatenews360
Quick Share

திருவெண்ணைநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவ எதிரொலி காரணமாக, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீமங்களாம்பிகை சமேத, ஸ்ரீகிருபாபுரீஸ்வரர், கோவில் மற்றும் பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள்,மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பார்த்தசாரதி,ரவிச்சந்திரன் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையால் சிறிது நேரம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 123

0

0