புக் பண்ண அரை மணி நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் : பிப்ரவரி முதல் அமலுக்கு வர வாயப்பு!
18 January 2021, 4:05 pmபுக் பண்ண உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் அரை மணி நேரத்தில் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு சிலிண்டர் மட்டும் பயன்படுத்துபவர்கள் சிலிண்டர் தீர்ந்து விட்டால் உடனடியாக அடுத்த சிலிண்டர் புக் செய்து அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தட்கல் முறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புக் செய்த நாளிலேயே சிலிண்டர் வீடு தேடி விநியோகிக்கப்படும்.
தட்கல் சேவை திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்த அரைமணி நேரத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும், அதே போல தட்கல் முறையில் பதிவு செய்யும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர வாயப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0