‘வாலி’ பட பாணியில் சம்பவம் : ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன்..2 வயது குழந்தையை தீயிட்டு கொளுத்திய கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 9:13 pm
Murder - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே  பாலியல் இச்சைக்கு உடன்படாத தம்பியின் மனைவி மற்றும் குழந்தை எரித்து கொலை.
 
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே  மலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. சிவக்குமாருக்கு  அஞ்சலை (வயது 21) என்ற மனைவியும், 2 வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை அஞ்சலை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தபோது இதற்கு அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்த கருப்பையா அஞ்சலையின் 2 வயது பெண் குழந்தையையும்கொலை செய்து தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தோட்டத்து பகுதியிலிருந்து  புகை வருவதை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்து  விசாரணை செய்து வருகின்றனர். தம்பியின்  மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 632

0

0