பேருந்து நிலையத்தில் தனியாக தவித்த 3 வயது குழந்தை : 2 மணி நேரத்தில் போலீசார் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!
Author: kavin kumar11 January 2022, 2:16 pm
தருமபுரி: அரூர் பேருந்து நிலையத்தில் பெற்றோரை காணாமல் தவித்த மூன்று வயது சிறுவனை பாதுகாத்து இரண்டு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த பாவக்கல் எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பு – வசந்தா தம்பதியினர் கோயமுத்தூரில் கூலி வேலை செய்து வரும் இவர்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு அரூர் வழியாக பேருந்து மூலம் தங்களது மூன்று வயது குழந்தை சபரியுடன் வசந்தா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர் வந்துள்ளனர். பின்பு அரூரில் இருந்து வேறு ஒரு பேருந்து மூலம் தங்களது கிராமத்திற்கு சென்று பேருந்தைவிட்டு இறங்கும் பொழுது சிறுவன் சபரி காணவில்லை என தெரியவந்தது.
மேலும் அரூர் பேருந்து நிலையத்தில் தவறி விடப்பட்ட சிறுவன் சபரி சுமார் 2 மணி நேரமாக தனியாக கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்ததை கண்ட பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அருகே இருந்த காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து குழந்தையை மீட்ட காவல் துறையினர் குழந்தையிடம் விசாரணை செய்து பெற்றோர்களுக்கு தகவல் அளித்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சுமார் 2 மணி நேரத்தில் பெற்றோர்களை வரவழைத்து பேருந்து நிலையத்தில் தகறவிட்ட குழந்தையை ஒப்படைத்த காவல் துறையினருக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
0
0