திருப்பூரில், காதலித்து வந்த பெண் திடீர் மறுப்பு தெரிவித்ததால், அவரைக் குத்திவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ் படித்து வந்தார். இந்த நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் மாவட்டம், ஆர்.கே.ஜி நகர் 2வது வீதியைச் சேர்ந்த சினேகா (23) என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், தீபக்கின் வயது தெரியாமல் சினேகா காதலித்ததாக தெரிகிறது. இதனிடையே, சினேகா கடந்த பொங்கல் விழாவிற்கு, தீபக்கின் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளார். அதன் பின்னரே தீபக்கின் வயதை சினேகா அறிந்துள்ளார்.
இதனால், காதலிப்பதை சினேகா நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட தீபக், கடந்த சில நாட்களாக சினேகாவிடம் போன் மூலம் காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு சினேகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீபக், கோவையில் இருந்து கத்தியை வாங்கிக் கொண்டு, நேற்று முன்தினம் பிற்பகல் சினேகா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, சினேகா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவருடன் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த தீபக், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சினேகாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் கிழித்துள்ளார்.
பின்னார், சினேகாவின் துப்பட்டாவால் தீபாக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, தீபக்கின் உடலை மீட்ட திருப்பூர் வடக்கு போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!
மேலும், தீபக்கின் பையை சோதனை செய்தபோது, அதில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘‘நான் உன்னை திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. இனிமேல் இந்த உலகத்தில் நம்மால் ஒன்றாக வாழ முடியாது. அதனால் உன்னையும் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன். நாம் இருவரும் சொர்க்கத்தில் போய் ஒன்றாக சேர்ந்து வாழலாம்’’ என எழுதியிருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.