+2 மாணவியை விரட்டி விரட்டி காதல்.. எதிர்பாரா மரணம் : பழி வாங்க கதையை முடித்த அண்ணன்.!!
சென்னை புழல் ஜெய் பாலாஜி நகரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு, கை, உடல் என பல்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் புழல் அடுத்த லட்சுமிபுரம் சேர்ந்த அவினாஷ் (எ) இம்மானுவேல் (18) வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட அவினாஷ் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீஸில் புழல் பகுதியைச் சேர்ந்தவர்கள் இளம்பரிதி (19), சூர்யா (23), சந்தோஷ் (21), லோகேஷ் (20) ஆகிய 4பேர் புழல் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவினாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் இளம்பரிதியின் தங்கை ஜெயபாரதியை காதலித்ததாகவும், நண்பனுடன் காதலிக்கும் பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டின் அருகே வந்த போது பெண்ணின் அண்ணன் இளம்பரிதி அவர்களை கண்டித்து தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்ட முற்பட்ட போது அவினாஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவருடன் வந்த நண்பர் நவீன் சக்கரவர்த்தி வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக இளம்பரிதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனிடையே அவினாஷ் காதலித்து தொல்லை தருவதால் ஜெயபாரதியை பாட்டி வீடு அமைந்துள்ள பொன்னேரி அருகே ஆமிதாநல்லூரில் தங்க வைத்த நிலையில் +2 தேர்வு எழுதுவதற்காக கடந்த மார்ச் 19ஆம் தேதி தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஆத்தூர் மேம்பாலம் அருகே லாரி மோதி ஜெயபாரதி உயிரிழந்த நிலையில் தந்தை தயாநிதி கால் நசுங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க: அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்!
தங்கை மரணத்திற்கு பழி வாங்குவதற்காக இளம்பரிதி அவினாஷை தமது வீட்டின் அருகே வரவழைத்து மது வாங்கி கொடுத்து சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து பழி தீர்த்தது கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புழல் போலீசார் 4பேரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.