காதலியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன் : வன்கொடுமை செய்த கொடூரம்.. பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 11:00 pm
Sex Harrassed 8 Arrest - Updatenews360
Quick Share

விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27) என்பவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ஹரிஹரன், அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்துக் கொண்ட அவர், அவற்றை தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹரிஹரன், அவரது நண்பர்களான ஜூனத் அகமது (வயது 27), பிரவீன் (வயது 21) மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் அந்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மிரட்டி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அவரும் அந்த வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், இதுதொடர்பாக அந்த பெண் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகியோரை கைது செய்தனர்.

Views: - 630

1

0