கோவை: மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என குமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி தெரிவித்துள்ளார்.
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தா கல்பா பவுண்டேசன் நிறுவன தலைவரும் ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரமத்தின் பிரம்மரிஷியும் ஆன ஈஸ்வரன் குருஜி அழிந்து வரும் பறவை இனங்களை காக்க வலியுறுத்தி கடந்த மாதம் 21ம் தேதி சிட்டு குருவி தினத்தை முன்னிட்டு ஸேவ் பேர்ட்ஸ் யுவர் செல்ப் ( SAVE BIRDS YOUR SELF) எனும் தலைப்பில் குமரியில் துவங்கி காஷ்மீர் வரை சுமார் 4000 கிலோ மீட்டர் இரு சக்கர பயணம் மேற்கொண்டார்.
தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து கோவை திரும்பிய குருஜி ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,பறவைகளின் புகழிடமாக உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குச் சென்று, அந்த கிராம மக்களை கவுரவித்து, தமது பயணத்தை துவங்கியதாக கூறிய அவர்,மண்வளம், மரங்களை பாதுகாப்பது போன்றவகளை காட்டிலும் மனித குலம் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழியாமல் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய பணியாக செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
தமது பயணத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும், கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் தமது பேரணியை நிறைவு செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக தமது பயணத்தின் நோக்கத்தை செல்லும் இடங்களில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் இளம் தலைமுறையினரிடம் எடுத்து கூறியதாகவும் பறவைகளின் தன்மையை மனித குலம் அறிந்து கொள்வதற்காக இந்த பேரணியை நடத்தியாக குறிப்பிட்டார்.
மேலும் தமது பயணம் முழுவதும் சாலை மார்க்கமாகவே இருந்ததாக குறிப்பிட்ட அவர்,இந்தியா முழுவதும் தரமான சாலைகளில் பயணம் மேற்கொண்டதாகவும்,இந்த நேரத்தில் மத்திய அரசிற்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
தமது பயணத்தின் நடுவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து தமது பயணத்தின் நோக்கம் குறித்து கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்றுவதே முக்கிய தீர்வு என உறுதிபட தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.