நிலத்தை அளக்க லஞ்சமா? சர்வேயர்களுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 4:58 pm
Admk Mla - Updatenews360
Quick Share

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகத்தினரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கடந்த சில நாட்களாக வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை எனவும், நில அளவையர்கள் நில அளவீடு செய்ய 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர் இனிவரும் காலங்களில் இது போன்று நடவடிக்கை தொடருமானால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் வருவாய் நிர்வாகத்தினருக்கு எதிராக கட்டண கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 331

0

0