Categories: தமிழகம்

மணப்பெண்ணை அறைந்த மணமகன்…திருமணத்தை நிறுத்திய பெண்: திடீர் மாப்பிள்ளை ஆன அத்தை மகன்…பண்டிருட்டியில் கலாட்டா கல்யாணம்..!!

பண்ருட்டி: மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், அதேமேடையில் அத்தை மகனை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொறியியல் பட்டதாரிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து. இவர்கள் இருவருக்கும் பண்ருட்டியில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

அதில் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் ஒருபகுதியாக பாடல் ஒன்றுக்கு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.

அப்போது மணமகளின் உறவினர் ஒருவரும் மேடையில் வந்து நடனமாடியுள்ளார். இதன் காரணமாக மணமகன் மிகவும் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. அப்போது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்திரத்தில் மணமகளின் கன்னத்தில் அறைந்துள்ளார். அனைவரும் முன்பாக திடீரென மணமகன் அப்பெண்ணை அடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதைத் தொடர்ந்து மணமகள் மிகவும் வருத்தத்துடன் அழுதுள்ளார். மேலும் அப்பெண், “இவர் திருமணத்திற்கு முன்பாகவே இப்படி நடந்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆகவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்” என்று அழுது கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து மணமகளை இரு வீட்டினரும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது மணமகளை அறைந்தற்காக மணமகன் அப்பெண்ணின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மணமகள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணத்தை நிறுத்தும் முடிவை இரு குடும்பத்தினரும் எடுத்துள்ளனர்.

அதன்பின்னர் மணமகளின் குடும்பத்தினர் உறவினர்களுடன் கலந்து பேசி அவரது அத்தை மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். திருமண வரவேற்பில் மணமகளை மணமகன் அறைந்ததால் அந்த திருமணம் நின்றுபோனதும், மணமகளின் சமயோசிதமான முடிவும் அங்கு மகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில், மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.