தம்பியை வரவேற்ற அண்ணன் : ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்!!

7 May 2021, 2:41 pm
Azhagiri Poster - Updatenews360
Quick Share

மதுரை : முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் ஆதரவாளர்கள் அவரது தம்பி மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதையடுத்து இணைந்த இதயங்களே எனக் குறிப்பிட்டு மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைவராக இருந்தபோது தன்னுடைய ஆதரவாளர்கள் சிலர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து முக அழகிரி பல்வேறு வகையிலும் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.

இதற்கு மு.க ஸ்டாலின் தான் காரணம் என அவர் குற்றம் சாட்டி, தனது தம்பியை பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் மு க ஸ்டாலின் ஒரு போதும் தமிழக முதல்வராக முடியாது என தொடர்ந்து பேசி வந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவி ஏற்புக்கு முன்னதாகவே தனது தம்பி முக ஸ்டாலினுக்கு அழகிரி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் இன்று முக அழகிரியின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் இணைந்த இதயங்களே எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது மதுரை திமுகவினர் மத்தியில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 155

1

0