தங்கையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்:போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Author: Udhayakumar Raman
27 November 2021, 4:29 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சித்தி மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது அண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியை சேர்ந்த விஜய், இவரின் தாய் உயிரிழந்து, மனவேதனையில் இருந்ததால் , தன்னுடைய சித்தி, அக்கா மகன் என்பதால் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார், விஜய் சில நாட்களாக அங்கு இருந்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சித்தி மகளான ஒன்பதாவது படிக்கும் 15 வயதுடைய சிறுமியை ஏமாற்றி, கடத்தி சென்ற விஜய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தொடர்ந்து நடந்த விபரீதத்தை பற்றி தன்னுடைய தாயிடம் சிறுமி கூறவே, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் ஓசூர் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியிடம் அத்துமீறிய விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 314

0

0