கடித்த பாம்பை கையில் பிடித்து வந்த சகோதரர்கள் : மருத்துவமனையில் பரபரப்பு!!

9 July 2021, 10:15 am
Snake Bite - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கடித்த பாம்பை உயிருடன் பிடித்து வந்த சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அர்ஜூனன் (வயது 31), கோபால் (வயது 23) இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் அதே பகுதியில் கலாசு தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.

இருவரும் நேற்று வழக்கம்போல சந்தை பேட்டையில் அடுக்கிவைக் கப்பட்டிருந்த சாக்கு பைகளை லாரி ஒன்றில் லோடு ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது சாக்கு பையில் இருந்த 5-1/2 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு கோபாலின் கைகளை கடித்தது.

இதனைப் பார்த்த அர்ஜூனன் பாம்பை விரட்டிச் சென்று அடிக்க முயன்ற போது அவரையும் பாம்பு கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பாம்பை அடித்து லேசான காயத்துடன் உயிரோடு கையில் பிடித்தபடி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

பாம்பை கையில் பிடித்தபடி அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரையும் பார்த்த சக நோயாளிகளும் சிகிச்சை பெறவந்தவர்களும் அச்சத்தில் அலறி அடித்து ஓடினர். இதன் பின் சிகிச்சை பெற்ற இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடிபட்ட பாம்புடன் உயிருக்கு போராடிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்த இரு இளைஞர்களால் சிறிது நேரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 333

0

0