தமிழகம்

மிருகத்தனமான தாக்குதல்… கொலை செய்பவர் கூட இப்படி செய்ய மாட்டார் : அஜித் மரணம் குறித்து நீதிபதிகள் வேதனை!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஹென்றி, போலீசார் இளைஞர் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப் மற்றும் இரும்பு ராடுகளால் தாக்கியதாகக் குறிப்பிட்டு, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். மேலும், காவல்துறையினர் தாக்கிய வீடியோவை நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர் ஹென்றி கூறியதாவது, தென்னை தோப்பில் அஜித்குமாரை காவலர்கள் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதல் நடந்தபோது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில், அங்கிருந்தே விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அவரது உடல் மதுரைக்கு ஏன் கொண்டு வரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அஜித்தின் தாய் மற்றும் சகோதரர் 28-ம் தேதி இரவு 12 மணி வரை அவரைப் பற்றி விசாரித்தனர். அப்போது, திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த SP, அஜித்தின் தாயிடம், “உங்கள் மகன் இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் பேசியபோது, நகைகள் காணாமல் போனது தொடர்பாக வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது?

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பேசிய போது, 28.06.25 அன்று பதிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஹென்றி பேசிய போது, நேற்று இரவே அது ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்:
புகார் அளிக்கப்பட்டவுடன் CSR பதிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஹென்றி:
இது முற்றிலும் சட்டவிரோதமான காவல் மரணம். தலைமைக் காவலர் கண்ணன் மானாமதுரை DSP-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறலாகும். அஜித்குமார் விசாரணையின்போது தப்பி ஓட முயற்சித்ததாக காவல்துறை கூறுகிறது. திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன், மகேந்திரன், காளீஸ்வரன், மானாமதுரை DSP ஆகியோர் அஜித்குமார் இறந்த பிறகு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்.

திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும்போது காவல்துறையினர் அவரைச் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வுக்கு முன் அஜித்தின் உடலை தாய் மற்றும் சகோதரர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உடற்கூராய்வு அறிக்கை அஜித்தின் தாயிடம் வழங்கப்படவில்லை.

நீதிபதிகள்:

நகைகள் காணாமல் போன வழக்கில் FIR ஏன் பதியப்படவில்லை? சிறப்பு விசாரணைக்கு யார் மாற்றினார்? அவருக்கு என்ன அதிகாரம்? இந்த வழக்கை சிறப்பு பிரிவுக்கு மாற்றிய காரணம் என்ன? குற்றம் உறுதியான பிறகே FIR பதிய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. சிறப்பு காவலர்கள் யார் உத்தரவில் விசாரித்தனர்? தனிப்படைக்கு யார் உத்தரவிட்டது? சமூக வலைதளங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை விசாரிக்குமா?அரசுத் தரப்பு:
காவலர்கள் அஜித்தை பைப் மூலம் அடித்து விசாரித்தனர்.நீதிபதிகள்:
சிறப்புப் படை எந்த அடிப்படையில் இந்த வழக்கை கையிலெடுத்தது? உயர் அதிகாரிகளை காப்பாற்ற முழு விவரங்களை மறைக்கக் கூடாது. திருட்டு வழக்கில் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளனர். அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்யவே காவல்துறை உள்ளது. நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள்.

வழக்கறிஞர் ஹென்றி: கோயிலில் உள்ள அனைத்து CCTV-களையும் காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

நீதிபதிகள்: ஏன் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் நடுவர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்படவில்லை? DGP யார் உத்தரவில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது என்று பதிலளிக்க வேண்டும். மாவட்ட SP ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்? உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும். சிறப்புப் படையிடம் யார் ஒப்படைத்தது? அஜித்தை 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு சென்றது யார் அதிகாரத்தில்? மாஜிஸ்திரேட்டுக்கு உடற்கூராய்வு அறிக்கை ஏன் உடனடியாக அனுப்பப்படவில்லை? அஜித்தை வெளியே வைத்து ஏன் விசாரித்தீர்கள்? காவல் நிலையத்தில் விசாரிக்கவில்லை? மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மதியம் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். SP மற்றும் DSP மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஒட்டுமொத்த காவல்துறையை குறை சொல்லவில்லை, ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுத் தரப்பு: தவறு செய்தவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.

நீதிபதிகள்: தொடர்புடைய அனைவர் மீதும் ஏன் வழக்கு பதியவில்லை? காவலர்கள் சட்டவிரோத உத்தரவுகளுக்கு கீழ்படிய வேண்டியதில்லை. காவலர்கள் மக்களை பாதுகாக்கவே உள்ளனர். காவல் மரணங்களை நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கிறது.

சட்டவிரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. திருப்புவனம் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை மதியம் 3 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் மற்றும் வீடியோ எடுத்தவர் மதியம் 3 மணிக்கு ஆஜராக வேண்டும். உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசு இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்தால், கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும். மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டதா என மருத்துவ பரிசோதனைக்குப் பின் உத்தரவு பிறப்பிக்கப்படும்.பின்னர், வழக்கு மதியம் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்: அஜித்தின் உடலில் எந்த உறுப்பையும் காவலர்கள் விட்டுவைக்கவில்லை. பதவி ஆணவத்தில் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது சாதாரண கொலை அல்ல, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலில் 44 காயங்கள் உள்ளன. சிறப்புப் படை FIR இல்லாமல் எப்படி வழக்கை கையிலெடுத்தது? குறைந்தபட்சம் ஒரு மூத்த அதிகாரியாவது இருக்க வேண்டும். இப்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. காவல்துறை கூட்டாக இந்தக் கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. மாநிலம் தன் குடிமகனைக் கொலை செய்துள்ளது. அஜித் இறக்கும் வரை FIR பதியப்படவில்லை.

அரசுத் தரப்பு: அரசு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் தேவை.நீதிபதிகள்:
கோயில் CCTV காட்சிகள் எங்கே?

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர்: CCTV காட்சிகளை CD-யாக தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்: நடந்தவை CCTV-யில் பதிவாகியுள்ளதா?

அரசுத் தரப்பு: அதை சாட்சியாக ஏற்க சான்று வேண்டும்.

நீதிபதிகள்: காவல்துறையின் செயல்கள் கேள்விக்குறியாகும்போது, அதை சாட்சியாக எடுக்கலாமே?

கோயில் உதவியாளர்: கோயில் CCTV காட்சிகளை SI ராமச்சந்திரன் எடுத்துச் சென்றார்.

நீதிபதிகள்: சம்பவ இடத்தில் சாட்சியங்கள் யார் சேகரித்தது? ரத்தக்கறைகள், சிறுநீர் அடையாளங்கள் உள்ளதா?

அரசுத் தரப்பு: அங்கு ரத்தக்கறைகள் இல்லை.

நீதிபதிகள்: SP மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாட்சியங்கள் ஏன் சேகரிக்கப்படவில்லை? அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறைகள் ஏன் சேகரிக்கப்படவில்லை?

வீடியோ எடுத்தவர்: கோயில் பின்புற கழிவறையில் இருந்து வீடியோ எடுத்தேன். பயம் காரணமாக சிறிது நேரம் மட்டுமே எடுத்தேன்.

நீதிபதிகள்: காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லையா? CCTV காட்சிகள் இல்லை. கோயில் CCTV காட்சிகள் எடுக்கப்பட்டதாக அறிக்கையில் இல்லை. இதை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கிவிடுவீர்கள்.

அரசுத் தரப்பு: அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகள் மீது நடவடிக்கைக்கு அவகாசம் தேவை.

நீதிபதிகள்: காவலர்கள் அஜித்தை தாக்கியதை மறைக்க முயற்சித்துள்ளனர். கைது கண் துடைப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இது ஆபத்தானது. மிளகாய் பொடி அஜித்தின் பிறப்புறுப்பு, வாய், காதுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அஜித்தின் தாயின் புகார் மீது இதுவரை வழக்கு பதியப்படவில்லை. 50 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்குவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அரசு இந்த வழக்கை CBCID சிறப்புக் குழு மூலம் விசாரிக்க வேண்டும். சட்டவிரோத மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

அரசுத் தரப்பு: வழக்கை CBI-க்கு மாற்றுவதில் ஆட்சேபனை இல்லை. அரசு நேர்மையாக உள்ளது.

நீதிபதிகள்: அஜித் மிருகத்தனமாக தாக்கப்பட்டு இறந்துள்ளார். இது கொலை வழக்கு அல்ல, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலில் 44 காயங்கள் உள்ளன. SI ராமச்சந்திரன் கோயில் CCTV காட்சிகளை எடுத்துச் சென்றார். லாக்கப் மரணங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? CCTV காட்சிகளை பாதுகாக்க வேண்டும். மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். அரசு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்புவனம் காவல் ஆய்வாளர், சிவகங்கை SP, விசாரணை அலுவலர் ஆகியோர் ஆவணங்களை நாளை வழங்க வேண்டும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!

மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…

10 hours ago

உங்களுக்கும் மாட்டு கொட்டகைதான்… பாமகவை எச்சரிக்கும் வானதி சீனிவாசன்!!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…

11 hours ago

வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…

11 hours ago

இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!

காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…

12 hours ago

சினிமாவில் விஜய், அஜித் இடங்கள் காலி ஆகாது : பிரபலம் சொன்ன கருத்து!

திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…

13 hours ago

மீண்டும் ரவி மோகனை வம்புக்கு இழுத்த ஆர்த்தி? இன்ஸ்டா ஸ்டோரியால் ஏற்பட்ட சர்ச்சை!

ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று…

13 hours ago

This website uses cookies.