கட்டிடம் இடிந்து விழுந்து காவலாளி பலி : இடிபாடுகளுக்குள் சிக்கிய சடலம்!!

By: Udayachandran
5 October 2020, 10:10 pm
Wall Collapse Dead - Updatenews360
Quick Share

மதுரை : கட்டிடம் இடிந்து காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அப்பன் திருப்பதி அருகே மீனாட்சி கார்டன் பகுதியில் திருச்சியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் 2 மாடி வீடு கட்டி வந்தார். இந்தக் கட்டிடத்துக்கு பொறியாளராக ஸ்டாலினும் ஒப்பந்ததாரராக சரவணனும் இருந்து வந்த நிலையில் கட்டிட காவலாளியாக அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த கட்டடத்தில் மாடி படிக்கட்டுகள் கட்டும் பணி இன்று நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு படிக்கட்டுகள் இடிந்து விழுந்து காவலாளியாக வேலை பார்த்த கண்ணன் அதே இடத்தில் பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து மதுரை அப்பன்திருப்பதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 39

0

0