கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தனது காலாவதியான மருந்துகள் அதிக அளவில் தனது வாடி கொட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசும்போது, சமீப காலமாக, அவர்களின் பகுதியில் காலாவதியான மருந்து மூட்டைகள் அதிகமாக காணப்படுவதாகவும், இரண்டாவது முறையாகவும் 15 க்கும் மேற்பட்ட மூட்டைகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டு உள்ளது என்றும், ஒரு தனி நபர் இவ்வளவு மூட்டைகளை கொண்டு வந்து அடுக்க முடியும் என்றால், மிகவும் யோசிக்க வேண்டியதாய் உள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள மாநகராட்சி பகுதியிலேயே இவ்வளவு மூட்டைகளை கொண்டு வந்து அடுக்க முடியும் என்றால், புறநகர் மற்றும் மற்ற வார்டு பகுதிகளில் எவ்வளவு ? மூட்டைகள் வைத்து இருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை.
காலாவதியான இவ்வளவு மருத்துவ பொருட்கள் அடங்கிய மூட்டைகளை, கொண்டு வந்து அடுக்குகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் என்ன ? என்பதை ஆராய்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் சாலைக்கு அனுமதி பெற்ற நிலையில் சாலையே இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது இதற்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பிற்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும். அதே போல தற்போது மழைக் காலமாக இருக்கிறது, பில்லூர் அணையின் மூன்றாவது மடியில் வரும் தண்ணீரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடிவதில்லை.
ஐந்து நாள் ஆறு நாள் என்று மக்களுக்கு காலதாமதமாக குடிநீர் கிடைக்கிறது. சில சமயங்கள் 10 நாள் இடைவெளி கூட ஏற்படுகிறது. தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.