“உழைப்பின் சிகரம்” எம்.பி வசந்த குமார் உடல் சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம்..!

30 August 2020, 11:52 am
Quick Share

மறைந்த எம்.பி வசந்த குமார் உடல் அவரின் தாய், தந்தையர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , காங்கிரஸ் எம்.பி வசந்த குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் எம்.பி வசந்த குமார் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து, வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று மலை அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்த்தீசுவரம் எடுத்து செல்லப்பட்டது.

அங்கு அவரது உறவினர்கள், பொதுமக்கள், காங்கிரல் கட்சியினர், கேரள மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பொது முடக்கம், போக்குவரத்து வசதி இன்மை போன்றவை இருந்தும் வசந்த குமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டர். அதனை தொடர்ந்து இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவருடைய தாய், தந்தையினர் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்ட எம்.பி வசந்த குமார் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

Views: - 50

0

0