“மனைவியும் என்னையும் சேர்த்து புதையுங்கள்“ : உருக்கமாக கடிதம் எழுதி கணவன் செய்த காரியம்!!

7 May 2021, 2:12 pm
Husband Suicide - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 37). இவரது வீட்டில் வைத்து செல்போன் பழுது பார்க்கும் பட்டரை ஒன்றை நடத்தி வந்தார்.

இவரது மனைவி சாரதா (வயது 35) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இதனையடுத்து நேற்று காலை முதல் பரமசிவம் மிகவும் சோகத்துடன் காணப்பட்டு வந்தார். நிலையில் நேற்று இரவு பரமசிவம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 233

0

0