பேருந்தை ஓட்டிக் கொண்டே பயணியின் நகையை திருடிய ஓட்டுநர்.. கையும் களவுமாக சிக்கிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2024, 3:16 pm

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண் பயணி ஒருவர் தனது பையை பாதுகாப்பாக இருக்கும் என டிரைவர் சீட்டிற்கு அருகில் வைத்தார்.

அந்த பயணி பையில் தங்க நகையுடன் இருக்கும் தனது அருகில் வைப்பதை கவனித்த டிரைவர் பஸ் ஓட்டி கொண்டுருந்தார்.

சிறிது தூரம் சென்றதும் யாரும் கவனிக்கவில்லை ஒரு கையில் பஸ் ஓட்டி கொண்டே என தனது சீட்டின் அருகில் வைத்திருந்த பையில் பெண் பயணியின் பையை திறந்து அதில் இருந்த தங்க நகை வைத்த பாக்சை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டார்.

ஆனால் இதனை சக பயணி ஒருவர் இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் பதிவு செய்தார். பின்னர் டிரைவரிடம் நகையை கேட்டபோது தன்னிடம் இல்லை என்றார்.

பின்னர் கீழே விழுந்து இருந்தது அதை எடுத்து வைத்து கொண்டதாக கூறினார். ஆனால் பையில் இருந்து எடுக்கும் வீடியோ இருப்பதாக கூறிய பின்னர் ஆம் தவறாக எடுத்து விட்டேன் மன்னிக்கும்படி கூறினார்.

அதற்குள் பயணிகள் அவசர போலீஸ் எண் 100 க்கு போன் செய்ததால் போலீசார் அங்கு விசாரித்து நகையை மீட்டு பயணியிடம் வழங்கினர்.

இதனால் கையும் களவுமாக டிரைவர் சிக்கி இருந்தாலும் பயணிக்கு நகை கிடைத்ததால் புகார் வேண்டாம் எனக் கூறினார்.

இதையும் படியுங்க: இங்க கேட்டா பதில் அங்கிருந்து வருது.. அப்போ CM பொம்மை தானே? இபிஎஸ் பதிலடி!

இருப்பினுன் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பயணிகளை பாதுகாப்பாக அவரவர் இருப்பிடத்திற்கு அழைத்து செல்லக்கூடிய டிரைவர் பயணிகளின் உயிர் மட்டுமல்லாமல் உடைமைகளுக்கும் பாதுகாவலராக இருப்பது வழக்கம்.

பஸ் பயணிகள் தவறி விட்டு செல்லும் பொருள்களை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்து மீண்டும் பயணிக்கு சேரும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் ஒரு பஸ் டிரைவரே பயணியின் நகைகளை திருடி பிடிப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 252

    0

    0