இதுதாங்க கோயம்புத்தூர் குசும்பு.. சர்ச்சை நேரத்தில் பிசினஸ் ட்ரிக் : ‘அன்னபூர்ணா’ வெளியிட்ட வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 செப்டம்பர் 2024, 7:56 மணி
Cream Bun
Quick Share

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார்.

நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவர் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே என காங்., தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதே போல மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்ட பாஜகவினர் குறித்து அன்னபூர்ணா உரிமையாளருக்கே போன் செய்து வருத்தம் தெரிவித்தாகவும், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் அண்ணாமலை.

இப்படி இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையாகி வரும் நிலையில், அன்னபூர்ணா நிறுவனம் இதுதான் சான்ஸ் என வியாபார யுக்தியை தீவிரப்படுத்தியுள்ளது.

டிரெண்டிங் நியூஸ் : நொடியில் கண்முன் வந்த எமன்… தலைக்கவசத்தால் தப்பிய உயிர் : பதை பதைக்க வைக்கும் வீடியோ!

பன்னுக்கு GST இல்ல, ஆனால் அதில் வைக்கும் க்ரீமுக்கு GST இருப்பது ஏன் என சீனிவாசன் பேசியிருந்த வைரலான வீடியோ மூலம், அதே டயலாக்கை வைத்து அன்னபூர்ணா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் CREAM + BUN = CREAM – BUN என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அந்த பதிவிற்கு ரிப்ளை செய்த நெட்டிசன்கள், குசும்புதான் யா உனக்கு, இருந்தாலும் #standwithannapoorna என்ற ஹேஷ்டேக்கை தெரிக்கவிட்டுள்ளனர்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 212

    0

    0