என்னது ஒரு கிலோ மட்டனுக்கு குடம் இலவசமா..? : சூர்ய வம்சம் ‘ரேஞ்சுக்கு’ பிஸினஸை டெவலப் செய்யும் வியாபாரி..!!

22 July 2021, 1:20 pm
Quick Share

கோவை: கோவையில் 1 கிலோ ஆட்டு கறிக்கு ஒரு பிளாஸ்டிக் குடம், அரைக்கிலோ கறிக்கு ஒரு தேங்காய் இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டு கறிக்கடை வியாபாரி ஒருவர் கலக்கி வருகிறார்.

கோவை சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் ”அம்மா அப்பா” என்ற பெயரில் ஆட்டு கறிக்கடை துவங்கப்பட்டுள்ளது. இந்த கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் தென்மாவட்டங்களில் செய்வது போன்று ஆட்டுக்கறி வாங்கினால் குடம் மற்றும் தேங்காய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் இந்த கடையில் கறிவாங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி 560 ரூபாய்க்கும், தலைக்கறி 180 ரூபாய்க்கும் நாட்டுக்கோழி 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடம், அரைக்கிலோ வாங்கினால் ஒரு முழு தேங்காய் என்றும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த ‘ஆஃபர்’ இருக்கும் என்றும் அறிவிக்கப்படுள்ளது. இதை பார்த்துவிட்டு மக்கள் கறிவாங்க செல்கிறார்களோ இல்லையோ..? இந்த போஸ்டர்கள் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 239

1

0