பத்தாம் வகுப்பில் தோல்வியா… Depression போக கொடைக்கானலுக்கு வாங்க : இலவச தங்கும் விடுதியை வழங்கும் காட்டேஜ் ஓனர்!!

18 July 2021, 1:00 pm
Kodai 10th - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கேரள மாணவர்களுக்கு மன உளைச்சலை போக்க இலவசமாக தங்கும் அறைகளை அளித்து வருகிறார் காட்டேஜ் ஓனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று அந்த தேர்வின் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் முடிவில் 99.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் வெறும் 5 சதவீத மாணவர்கள் மட்டுமே தோல்வி அடைந்து இருப்பதாக தெரிகிறது.

இதில் தோல்வி அடைந்த 5 சதவீத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து இருப்பதாகவும் தெரிகிறது. மாணவர்களின் மன உளைச்சலை போக்க கொடைக்கானலில் இலவச தங்கும் அறைகள் தருவதாக சுதீஷ் என்பவர் உறுதியளித்திருக்கிறார்.

கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சுதீஷ் கொடைக்கானலில் காட்டேஜ்கள் வைத்துள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் கேரளாவில் நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் மிகுந்த மன உளைச்சல் உண்டான பதிவுகளை பதிவு செய்வதாக அறிந்தவர் கேரளா பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் அறைகளை இலவசமாக தருவதாகவும் மேலும் அவரது நண்பர்களும் இதில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த பதிவை இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட உடனேயே மிகவும் வைரலாக பரவத் துவங்கியது. இதனால் கேரளாவில் இருந்து பல தரப்பட்ட மக்களும் இவருக்கு தொடர்ந்து அழைத்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.

தற்போது இந்த அழைப்புகளை ஏற்று வரும் சுதீஷ், தோல்வி அடைந்த மாணவர்கள் குடும்பத்தினருக்கு அறைகளையும் ஒதுக்கீடு செய்து இருக்கிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தால் அது வாழ்வின் முடிவு இல்லை என்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உலகில் பல இடங்களில் சாதித்த உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மேலும் தோல்வி அடைந்த மாணவர்கள் கொடைக்கானலுக்கு வரும் பொழுது அவர்களை ஊக்கப்படுத்த இங்கு சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மன உளைச்சலைப் போக்க புது ஐடியாவில் கண்டுபிடித்த சுதீசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Views: - 179

0

0