ஒன்ணு வாங்கினா ஒண்ணு FREE.! மதுரை பிரியாணி கடையின் அறிவிப்பு.!!

11 August 2020, 5:38 pm
Madurai Biriyani - Updatenews360
Quick Share

மதுரை : கொரானா ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகை விலையில் பிரியாணி விற்பனை செய்யும் உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் உற்சாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உலகையை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் காரணமாக உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்தளவே உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.,

இந்நிலையில் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் மதுரையில் இயங்கி வரும் பிரபல யாஸ்மின் பிரியாணி உணவகம் தனது 2வது கிளையை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தெற்குவாசல் சின்னக் கடை தெருவில் துவக்கியுள்ளது.,

இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் ராஜாஹீசேன் தலைமையில் சிறப்பு விருந்தினராக அருண்லால் கலந்து கொண்டு புதிய உணவகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.,

சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையிலும் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையிலும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகள் வழங்கபட்டு வருகிறது., அதேபோல் கொரோனாக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினந்தோறும் மாலையில் நாட்டுக்கோழி சூப்பு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அடாப்ட் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 10

0

0