கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட கேக் மிக்சிங் திருவிழா: 550 கிலோ கேக் தயாரிக்க முடிவு..!!

Author: Aarthi Sivakumar
6 November 2021, 12:30 pm
Quick Share

கோவை: சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேக் கலவை திருவிழா இன்று நடைபெற்றது.

ஆண்டு தோறும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ப்ளம் கேக் தயாரிப்பதற்கான கேக் மிக்ஸிங் விழாவானது வெவ்வேறு நட்சத்திர விடுதிகளிலும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள ஹஷ் 6 ஹோட்டலில் இன்று கேக் மிக்சிங் விழா நடைபெற்றது.

இதற்காக கேக் தயாரிக்கும் கலவையில் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்தா பழங்கள், ஆரஞ்சு தோல், கருப்பு கரும்பு, அத்திப்பழம் மேலும், மதுபான வகைகளான விஸ்கி, ரம், வோட்கா, ஜின் மற்றும் பீர் ஆகிய பல்வேறு மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டன.

இதனை தொடர்ந்து இந்த கலவையானது கிறிஸ்துமஸ் பன்டிகை வரை காற்று புகாத பைகளில் அடைக்கப்பட்டு சேமிக்கபட்டு பாதுகாக்கப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இந்த கேக் கலவையை பயன்படுத்தி 550 கிலோ எடை உடைய பிளம் கேக் தயாரிக்க இருப்பதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஹாஷ் 6 உணவக செஃப் ராஜா துவக்கி வைத்தார். மேலும், மார்டின் நிறுவன இயக்குனர் லீமா ரேஸ் மார்டின், ரேட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Views: - 463

0

0