3 நாட்களாக 150 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் தவித்த கன்றுக்குட்டி : 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!!

21 November 2020, 2:41 pm
Cow Save - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : வண்டலூர் அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள 150 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை 3 மணி நேரமாக போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

செங்கல்பட்டு அருகே கண்டிகை மல்ரோசபுரம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஒட்டியபடி 150 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் கடந்த 18ஆம் தேதி மாலை அப்பகுதியில் தாய் பசுவுடன் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி எதிர்பாராதவிதமாக தவறி கல்குவாரியில் விழுந்தது.

கல்குவாரியில் கன்று குட்டி தவறி விழுந்ததை பார்த்த நபர் சிறுசேரி மற்றும் மறைமலைநகரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் கன்று குட்டியை மீட்கும் பணியில் போராடி வந்தனர்.

ஆனால் இரவு ஆனதால் மீட்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து நேற்று மாலை வந்த 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் 3 மணி நேரமாக கயிறு கட்டி கன்றுக்குட்டியை போராடி மீட்டனர். பின்னர் அந்தக் கன்று குட்டியை தாய் பசு உடன் அனுப்பி வைத்தனர்.


மேலும் கல்குவாரியில் தவறி விழுந்த கன்று குட்டியை தேடி கடந்த 3 நாட்களாக தாய் பசு மாடு கல்குவாரி சுற்றி சுற்றி கத்தியபடி வலம் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0