நீங்க செஞ்சது தப்பு..அனைத்து கட்சியையும் கூப்பிடுங்க : திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் விசிக!!
Author: Udayachandran RadhaKrishnan31 October 2021, 11:37 am
தமிழ்நாடு நாள் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்புக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த நாளான நவ 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நவ.1ம் தேதி எல்லை போராட்டத்தை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மெட்ராஸ் மாகாணத்தை மாற்றி 1968ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என பெயரிடப்பட்ட அநத் நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
ஆனால் இந்த அறிவிப்பை அதிமக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் தொல் திருமாவளவனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசாணை பிறப்பிப்பதற்கு முன் முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர்கள், எல்லை மீட்பு போராளிகள், இன உணர்வாகளர்கள் மற்றும் தமிழறிஞர்களை அழைத்து கலந்தாலோசித்து முடிவெடுத்தால் சிறந்தது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சியான விசிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0