ஒட்டகப்பால் கேட்ட இளைஞர்களை ஒட்ட நறுக்கிய போலீஸ் : அதிரடி கைது!!

6 November 2020, 7:22 pm
camel Milk 3 Arrest - Updatenews360
Quick Share

புதுச்சேரி : தனியார் பேக்கரியில் ஒட்டகபால் கேட்டு கடையை சூறையாடிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் நாராயணன். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 3 இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் கடை உரிமையாளரை தாக்கிவிட்டு கடையை சூறையாடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரை அடுத்த அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து முருங்கப்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த நைனார்மண்டபத்தை சேர்ந்த உதயா, கோகுல், முருகவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Views: - 20

0

0