‘நெஜமா தான் சொல்றீங்களா’…படுஜோராக நடக்கும் ஒட்டகப்பால் ‘டீ’ விற்பனை: சேலத்தை கலக்கும் இளைஞர்கள்..!!

Author: Aarthi Sivakumar
4 December 2021, 5:05 pm
Quick Share

சேலம்: கோரிமேடு பகுதியில் இளைஞர்கள் நடத்தி வரும் ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஒட்டகப்பாலில் டீ, காபி போட்டுக் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

ஒட்டகப் பால் என்றாலே நமக்கு நினைவில் வருவது வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேல் காமெடிதான். அதில், ஒட்டகப்பாலில் டீ போடுனு எத்தனை தடவ சொல்றதுனு கடைக்காரரை நடிகர் வடிவேலு வம்பிழுப்பார். இந்த காமெடி உண்மையாக்கும் நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது.

‛உண்மையாவே விக்குறீங்களா...’ சேலத்தில் சுடச்சுட ‛ஒட்டகப் பால்’ டீ விற்பனை!

சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள டீக்கடை ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்த இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒட்டகப் பாலில் டீ, காபி மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒட்டகப் பால் 48 மணி நேரத்தில் சேலம் வந்தடைகிறது. ஒட்டகப் பால் 192 மணி நேரம் வைத்துப் பயன்படுத்தலாம், அதாவது 8 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

‛உண்மையாவே விக்குறீங்களா...’ சேலத்தில் சுடச்சுட ‛ஒட்டகப் பால்’ டீ விற்பனை!

உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை கொண்ட தாய்ப்பாலுக்கு இணையான ஒட்டகப் பாலின் விலை 1 லிட்டர் ரூ. 900க்கு விற்பனை செய்து வருகின்றனர். டீ ஒன்று ரூ.60க்கு விற்கப்படுகிறது. மேலும், தயிர், வெண்ணை, நெய், பன்னீர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விலை அதிகமாக இருந்தாலும் ஒட்டகப் பாலின் நன்மை அறிந்தவர்கள் தங்களது கடையைத் தேடி வருகிறார்கள்.

தங்களிடம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒட்டகப் பால் கேட்பவர்களுக்கு பாலாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய உணவுகளை அனைவரும் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் என கடையின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 293

0

0