குளியலறைக்குள் மூன்றாவது கண்… யூடியூப் பார்த்து கேமரா தயாரித்த இளைஞர் : இலங்கை அகதிகள் குடியிருப்பில் நடந்த அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 6:24 pm
Camera Bathroom - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் குளியலறையில் கேமரா பொருத்தி படம் எடுக்க முயற்சி செய்த இலங்கை வாலிபர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு குளிப்பதற்காக வீட்டின் வெளிப்புறம் உள்ள குளியலறைக்குச் சென்று குளித்துள்ளார்.

குளியலறை சுற்றிப் பார்க்கும்போது குளியல் அறையின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான கேமரா ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தனது வீட்டில் இருப்பவர்களிடம் அந்த பெண் குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது குறித்து கூறினார். அதனைக் கண்ட அக்குடும்பத்தினர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் விரைநை்து சென்ற வத்தலக்குண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஷேக் முகமது மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் கேமராவை பொருத்தி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரணை மேற் கொண்டதில் அவர் யூடியூப் சேனலை பார்த்து தானியங்கி வெப் கேமரா ஒன்றை தயாரித்துள்ளார். செல்போனுக்கு பயன்படுத்தும் பவர் பேங்க் மூலம் கேமராவை இயங்கச் செய்து கேமராவில் பொருத்தப் பட்டுள்ள மெமரி கார்டு மூலம் காட்சிகள் பதிவாகி தயார் செய்துள்ளார்.

பின்னர் அதனை குளியலறையில் பொருத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 515

0

0