பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ₹3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். திமுகவினரின் தொடரும் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த நான்கு வருடங்களில், ₹75 லட்சம் வரை, குவாரி உரிமையாளரிடமிருந்து இந்த திமுக வட்ட செயலாளர் வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. திமுகவினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது.
விசாரணை வளையத்தில் இருந்து ஊழல்வாதிகளைக் காப்பாற்ற, மக்கள் வரிப்பணத்தில் உச்சநீதிமன்றம் வரை செல்லும் முதலமைச்சர் திரு.
ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அனைத்துத் துறைகளிலும் ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, திமுக குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், யாருக்குமே பாதுகாப்பில்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து எந்தக் கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் ரவி மோகன்…
புரொமோஷனில் தீவிரம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில்…
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கழக…
காதலே தனிப்பெரும்துணையே 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள் தழும்ப…
டாஸ்மாக் முறைகேடு டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கமான பல பெரும்புள்ளிகளுடன் ஆகாஷ் பாஸ்கரனின் பெயரும் சிக்கியது. அதன்படி…
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழி உண்டு. இது சினிமாத்துறைக்கு மிக பொருத்தம் என்றே சொல்லலாம். காரணம் வாய்ப்பு…
This website uses cookies.