‘நீட் தேர்வை ரத்து செய்க‘ : கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 12:51 pm
SFL Protest -Updatenews360
Quick Share

கோவை : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்தல், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

Views: - 212

0

0