60 கிராம நிர்வாக உதவியாளர்களின் பணி நியமனம் ரத்து: மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

Author: Rajesh
1 April 2022, 4:40 pm
Quick Share

மயிலாடுதுறை: புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட 60 கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்கள் அனைத்தையும் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக வருவாய்த்துறை மூலம் காலிபணியிடங்கள் நிரப்புவதற்கு விளம்பரம் வெளியிப்பட்டது.

அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இந்த மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்றது. மயிலாடுதுறை 16, குத்தாலம் 14, சீர்காழி, தரங்கம்பாடி தலா 15 என்று மொத்தம் 60 பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு கடந்த வாரம் பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது.

இதில் வெளிப்படை தன்மையின்றியும், அரசாணை நிலை எண்.574ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக பணிநியமன ஆணை வழங்கி விதிமீறல்கள் செய்துள்ளது தெளிவாகியுள்ளது.

அரசு விதிகள் மற்றும் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிநியமனம் தொடர்பாக மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாசில்தார்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விளம்பர அறிவிப்பு முதல் பணிநியமனம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆணை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 928

0

0