மாட்டு வண்டியை ஓட்டி வந்து மாஸ் காட்டிய ம.நீ.ம வேட்பாளர் : வேட்புமனு தாக்கலின் போது சுவாரஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 12:28 pm
Cart MNM Candidate - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்து, தங்களது வேட்பு மனுவை வழங்குகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மையம் சார்பில் 81-வது வார்டில் போட்டியிடும் கார்த்திகேயன் என்பவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்தார்.

அவரே மாட்டு வண்டியை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்று, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Views: - 365

0

0