வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா வியாபாரம் : கேரள கும்பலுக்கு போலீசார் வலை!!

20 June 2021, 11:28 am
Cannabis - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அருமனை அருகே வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் கேரள கும்பலை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த அன்டுகோடு பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமது அனஸ் என்பவர் சுதர்சனன் என்பவரின் வீட்டில் மீன் வியாபாரம் செய்வதாக கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த வீட்டில் தங்கி வந்துள்ளார் .

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மதுவிலக்கு போலீசார் இந்த பகுதிக்கு வந்து இந்த வீட்டில் தங்கியிருந்த முகமது அனசை கைது செய்து சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தனது வீட்டில் குடியிருப்பவர் மீது சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் சுதர்சனன் இவர்களின் தொழில் குறித்து சந்தேகம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முகமது அனசின் நண்பர்கள் இருவர் இந்த வீட்டிற்கு வந்து அங்கு இருந்த பொருட்களை எடுக்க முயன்றுள்ளனர் .இதுகுறித்து வீட்டு உரிமையாளர் இவர்களை விசாரித்து கொண்டிருக்கும்போது அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் சென்று பார்த்த பொழுது பெருமளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த இவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அருமனை காவல்துறையினர் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு வந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கேரள ஆசாமிகளை தேடி வருகின்றனர்

Views: - 263

1

0