காட்பாடி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்…

Author: kavin kumar
2 October 2021, 5:56 pm
Quick Share

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று வழக்கமான காவல் பணியில் ஈடுபட்டிருந்த காட்பாடி ரயில்வே போலீசார் ஐந்தாவது நடைமேடையில் பயணிகள் அமரும் நாற்காலி கீழே கேட்பாரற்று கிடந்த பையினை காட்பாடி ரயில்வே போலீஸார் சோதனையிட்டதில் கடத்தலுக்கு எடுத்துச்சென்ற ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய 5 கிலோ கஞ்சா இருப்பதனை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் காட்பாடி ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்

Views: - 782

0

0