மக்கா சோளத்தில் மறைத்து வைத்த கஞ்சா : 4 கிலோ கஞ்சாவுடன் லாரி ஓட்டுநர் கைது!!

23 November 2020, 3:21 pm
Andhra Ganja - Updatenews360
Quick Share

ஆந்திரா : குண்டூரில் இருந்து மக்காசோளம் ஏற்றிவந்த லாரியில் நூதனமாக மறைத்து கடத்திவரப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாதவரம் மதுவிலக்கு போலிஸாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில்
புழல் ரெட்டேரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சுமார் 20 டன் சோளம் ஏற்றி வந்த லாரியில் 4 கிலோ கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

புழல் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திக் என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி 4 கிலோ கஞ்சா மற்றும் ஓட்டுனர் கார்த்திக்கை புழல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நூதனமான முறையில் லாரியில் கஞ்சாவை கடத்திவந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு வழியாக கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

Views: - 29

0

0