தர்மபுரி ; பொம்மிடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்ல பொம்மிடி அருகே ஒட்டு பள்ளம் எனும் பகுதியில் இன்று பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து, அவர்களின் கையில் இருந்த பையினை சோதனை செய்தனர். அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பனின் உதவியாளராக இருப்பவருமான பொன்மணி என்பவரின் மகன் ஜெயசூர்யா (வயது 21) என்பதும், இவர் தான் இப்பகுதியில் முக்கிய புள்ளியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இவருடன் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் அரவிந்த் குமார் (வயது 21), பாலன் என்பவரின் மகன் சேட்டு (வயது 22) ஆகியோர், வெளியூரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இந்தப் பகுதியில் சிறு சிறு பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.